இன்றைய தேதியில் மிகவும் சந்தோசமான நபர் யாரென்றால் அது தெலுங்கின் சூப்பர்ஹிட் இயக்குனர் சுகுமார் தான். சந்தோசத்திற்கான முதல் காரணம் டோலிவுட் இளவரசன் மகேஷ்பாபுவை வைத்து அவர் இயக்கியுள்ள ‘1 நேனொக்கடினே’ படம் நேற்றுத்தான் ரிலீஸாகி ஆந்திராவில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது.
இன்னொரு சந்தோசம் இன்றைக்கு சுகுமாரின் பிறந்தநாள். நேற்று படம் ரிலீஸ், இன்று பிறந்த நாள் என்றால் பின்னே சந்தோசத்துக்கு கேட்கவாவேண்டும்…? இன்று பிறந்தநாள் காணும் சுகுமாருக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.