தந்தை எஸ்.பி.பாலசுப்ரமணியனைப் போலவே அவரது மகன் சரணும் நல்ல திறமைசாலிதான். ஒரு பின்னணி பாடகராக மட்டுமின்றி, தயாரிப்பு, நடிப்பு என ஒவ்வொரு துறையிலும் கால் தடம் பதித்தவர். தன் தந்தையைப்போல பின்னணி பாடகராக மட்டுமே புகழ்பெற விரும்பாத சரண் ஒரு நல்ல தயாரிப்பாளராக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளவே அதிகம் விரும்புகிறார்.
வெங்கட்பிரபு சொன்ன ‘சென்னை-28’ கதையில் நம்பிக்கை வைத்து அந்தப்படத்தை தயாரித்து, இன்று அவர் முன்னணி இயக்குனராக வலம் வர பாதை போட்டுக்கொடுத்தவர் சரண். அதேபோல இயக்குனர் சமுத்திரக்கனிக்கும் ‘உன்னை சரணடைந்தேன்’ படம் மூலம் முதல் படி இவர் அமைத்து தந்ததுதான். இவரது பெயரை தமிழ்சினிமா நினைவு கூற இவர் தயாரித்த ‘ஆரண்ய காண்டம்’ என்ற ஒரு படம் போதும்.
தற்போது ‘வானவராயன் வல்லவராயன்’, ‘விழித்திரு’ ஆகிய படங்களில் நடிப்பதுடன் ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கும் ‘திருடன் போலீஸ்’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார் சரண். இன்று பிறந்தநாள் காணும் சரணுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.