
‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தை இயக்கிய ராஜ்மோகன், அதற்கடுத்ததாக தான் இயக்கிய ‘வானவராயன் வல்லவராயன்’ என்கிற படம் மூலம் தான் பளிச்சென்று அறியப்பட்டார். அண்ணன்-தம்பி பாசத்தை மையபடுத்தி, அதில் காதலையும் செண்டிமெண்ட்டையும் புகுத்தி நல்ல படம் என்கிற பாராட்டை பெற்றார்.
ஆனால் அடுத்ததாக தற்போது அவர் இயக்க இருப்பது இந்த இரண்டு படங்களுக்கும் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு பீரியட் படம். படத்தின் ஆரம்பகாட்சிகள் 1950களில் நடந்த நிகழ்வுகளை கூறுவது போலவும், அதன்பின் படம் நிகழ்காலத்தில் நடப்பது போலவும் கதையை வடிவமைத்துள்ளாராம் ராஜ்மோகன்.
படத்தின் கதாநாயகனாக அதர்வா நடிக்கிறார். உடன் தம்பி ராமையா, எஸ்.பி.பி.சரண் என வானவராயன் கூட்டணி நடிகர்களுடன் பட்டியல் சேகர், மெட்ராஸ் நந்தகுமார் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப்படத்தின் கதாநாயகி தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
மெரீனா படத்திற்கு இசையமைத்த கிரிஷ் தான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்தின் கதை பள்ளத்தாக்கை ஒட்டி அமைந்துள்ள மலைப்பகுதி கிராமங்களில் நடைபெறுவதால் தேனி, கொடைக்கானல் மலைப்பகுதியில் இதன் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்களாம்.
Comments are closed.