கல்யாண விருந்துன்னா அதுல பாயாசம் கட்டாயம் இருக்கணும்.. பாயாசம்னா அதுல கட்டாயம் முந்திரி இருக்கணும்.. அதுமாதிரி இன்றைக்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்கள் பலரும் தங்கள் படங்களில் சந்தானம் இருக்கணும் என்றுதான் ஆசைப்படுகின்றனர்.
அந்த அளவிற்கு சந்தானம் தமிழ்சினிமா ரசிகர்களின் மனதில் தனது நகைச்சுவை நடிப்பால் ஆழமாக ஊடுருவியுள்ளார். வடிவேல், விவேக் இருவரின் தேக்கத்தினால் தமிழ்சினிமாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இடைவெளியை சரியான நேரத்தில் சமன் செய்திருக்கிறார் சந்தானம்.
இன்று நிற்க கூட நேரம் இல்லாமல் படப்பிடிப்புக்கு ஓடிக்கொண்டிருக்கும் சந்தானம் இந்த இடத்தை அடைந்திருப்பதற்கு அவரது கடின உழைப்பும் நகைச்சுவையில் அவரது டைமிங் சென்ஸும் தான் காரணம்.. இன்று பிறந்தநாள் காணும் சந்தானத்திற்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.