ஹேப்பி பர்த்டே ராஜு சுந்தரம்..!

100


நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பல முகங்களுக்கு சொந்தக்காரர் தான் ராஜு சுந்தரம்.. ஆரம்பத்தில் சிலகாலம் பிரபுதேவாவின் சகோதரர் என அறியப்பட்டாலும் தனது நடனத்திறமையால் பின்னாளில் அவரைப்போலவே இவரும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தார்.

பல படங்களுக்கு பிஸியாக நடனம் அமைத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இயக்குனர் ஷங்கர், தான் இயக்கிய ‘ஜீன்ஸ்’ படம் மூலமாக இவரை ஒரு நடிகராகவும் ஆக்கினார். சில படங்களில் ஹீரோவாக நடித்த ராஜுசுந்தரம் அஜித் நடித்த ‘ஏகன்’ படத்தை இயக்கி ஒரு இயக்குனராகவும் மாறினார்.

இன்றும் பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார் ராஜு சுந்தரம். நேற்று பிறந்தநாள் கொண்டாடிய ராஜுசுந்தரத்திற்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.