கங்கை அமரனின் மகன்.. வெங்கட்பிரபுவின் தம்பி. என பின்னணி அடையாளங்கள் பலமாக இருந்தாலும் ‘என்ன கொடுமை சார் இது’ என்று சென்னை-28 படத்தில் பேசிய ஒரே வசனம் மூலமாக ஒரு நகைச்சுவை நடிகனாக அடையாளம் காணப்பட்டவர் பிரேம்ஜி அமரன்.
“கதை இல்லாமல் படம் எடுத்தாலும் எடுப்பார்.. ஆனால் பிரேம்ஜி இல்லாமல் படம் எடுக்கமாட்டார்” என்று சொல்லுமளவுக்கு தனது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் தவறாமல் பிரதான கதாபத்திரம் ஒன்று இவருக்கு இருக்கும்..
சும்மாவும் சொல்லக்கூடாது.. ‘மங்காத்தா’, ‘பிரியாணி’ ஆகிய படங்களில் அஜித், கார்த்திக்கு ஈடுகொடுத்து கலக்கியிருந்தார். ஒரு இசையமைப்பாளராக அறியப்படவேண்டும் என விரும்பியவர் நடிகராக மாறிப்போனது காலம் செய்த வினோதம்.. இன்று பிறந்தநாள் காணும் பிரேம்ஜிக்கு behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.