ஹேப்பி பர்த்டே ட்டூ ‘ரிபெல் ஸ்டார்’

57

தெலுங்கு சினிமாவின் ‘ரிபெல் ஸ்டார்’ என செல்லமாக அழைக்கப்படுவர் பிரபாஸ். பார்க்க சாக்லேட் பாய் மாதிரி இருந்தாலும் ஆக்‌ஷன் ஏரியாவில் அடித்து தூள் கிளப்புபவர். 2002ல் தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்த பிரபாஸ் இன்று தெலுங்கு முன்னணி இயக்குனர்களின் செல்லப்பிள்ளை. கடந்தவருடம் கூட நம்ம லாரன்ஸ் தெலுங்கில் இயக்கிய ‘ரிபெல்’ படத்தின் கதாநாயகன் இவர்தான்.

தற்போது எஸ்.எஸ்.ராஜமௌலி டைரக்‌ஷனில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘பாஹூபாலி’ என்ற வரலாற்றுப் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்று 34வது வயதில் அடியெடுத்து வைத்து பிறந்தநாள் கொண்டாடும் பிரபாஸுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.