ஒரு தயாரிப்பாளராக இருப்பதால் தனது மகன் திரையுலகில் நுழைய ஒரு அறிமுகப்பாதை அமைத்துக்கொடுப்பது ஒரு தகப்பனின் கடமைதான்,. அதன்பின் அதை சரியான முறையில் பயன்படுத்தி முன்னேறிக் கொள்வது மகனின் சாமர்த்தியம். இதை சரியாக பயன்படுத்திக்கொண்டவர் என்றால் அது நடிகர் ஜீவா தான்.
ஆர்.பி.சௌத்ரியின் மகன் ஜீவா என அழைத்த காலம் மாறி, ஜீவாவின் தந்தை ஆர்.பி.சௌத்ரி என அழைக்கும்படி உயர்ந்ததற்கு காரணம் நிச்சயமாக ஜீவாவிடம் உள்ள திறமையும் கடின உழைப்பும் தான் காரணம்.
தனது வாரிசுகளை பிரபலப்படுத்துவதற்காக முன்னணி நடிகர்களை அழைத்து வந்து கெஸ்ட்ரோலில் நடிக்க வைக்கும் இந்தக்காலத்தில், இரண்டு முன்னணி ஜாம்பவான்கள் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தில் கெஸ்ட்ரோலில் ஒரு டான்ஸ் ஆட அழைக்கப்பட்டு ஆடியும் கொடுத்திருக்கிறார் ஜீவா.
இன்று பிறந்தநாள் காணும் ஜீவாவுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.