ஹேப்பி பர்த்டே ட்டூ மெகாஸ்டார்

78

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி இன்று தனது 58வது பிறந்தநாளை தொட்டுள்ளார். 1978ஆம் வருடம் தெலுங்கு சினிமாவில் நுழைந்த சிரஞ்சீவி, என்.டி.ராமாராவ், கிருஷ்ணா ஆகியோருக்குப்பின் இருபது வருடங்கள் யாராலும் அசைக்கமுடியாத சூப்பர்ஸ்டாராக தெலுங்கு சினிமாவில் வலம்வந்தவர்.

தமிழில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய 47 நாட்கள் படத்தில் அறிமுகமான சிரஞ்சீவி மேலும் ரஜினியுடன் ராணுவ வீரன், மாப்பிள்ளை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஆந்திர அரசியலில் தீவிரமாக இறங்கியதை தொடர்ந்து சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார் சிரஞ்சீவி.

தற்போது இவரது மகன் ராம்சரண் தேஜா தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி நடிகராக உள்ளார். இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடும் மெகாஸ்டார் சிரஞ்சீவிக்கு Behind frames பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Leave A Reply

Your email address will not be published.