‘மதராசப்பட்டினம்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக டைரக்டர் விஜய்யால் அறிமுகம் செய்யப்பட்டவர் தான் ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன். தன் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் குடிகொள்ளும் பாக்கியம் எமிஜாக்சனுக்கும் வாய்த்தது.
அந்த படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த எமி ஜாக்சன் அதன்பின் ‘தாண்டவம்’ படத்திலும் அதையடுத்து தற்போது ஷங்கரின் ‘ஐ’ படத்திலும விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப்படமும் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுக்கும் என்பது நிச்சயம். இன்று பிறந்தநாள் காணும் எமி ஜாக்சனுக்கு behind frames தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.