ஹேப்பி பர்த்டே ட்டூ அதர்வா.!

156

சினிமாவில் நடிகர்களின் வாரிசுகள் வருடத்திற்கு இருவர் அல்லது மூவராவது களம் இறங்குகிறார்கள். ஆனால் எல்லோருமே பிரகாசிக்கிறார்களா என்றால் இல்லை. ஆனால் இன்னும் ஒரு சிலர் ‘பான்வித் சில்வர்ஸ்பூன்’ என்பதுபோல பிறக்கும்போதே தங்களது பெற்றோரின் நடிப்பாற்றலையும் கிரகித்துக்கொண்டுவிடுகிறார்கள்.

அதர்வா நடிகராக அறிமுகமான போது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார்.. காரணம் அவர் நடிகர் முரளியின் மகன் என்பதுதான்… அதற்கேற்ற மாதிரி அவரது அதிர்ஷ்டமோ என்னமோ மூன்றாவது படத்திலேயே மோதிரக்கையால் குட்டுப்பட்டு பரதேசி ஆகும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது.

இன்று ‘இரும்பு குதிரை’, ‘ஈட்டி’ என படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் பக்குவம் அவருக்கு வந்திருக்கிறது. தந்தயைப்போல அவரும் தமிழ்சினிமாவில் நிலையான ஒரு இடத்தை பிடிப்பார் என்பதும் உறுதி. இன்று பிறந்தநாள் காணும் அதர்வாவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.