ஹேப்பி பர்த்டே பிரபுசாலமன்..! நாளை இயேசுபிரான் பிறந்த ஊருக்கு செல்கிறார்..!!

167

ரசிகர்களின் நாடித்துடிப்பறிந்து படம் எடுக்கும் வல்லமை எல்லா இயக்குனர்களுக்கும் கைவந்துவிடுவதில்லை. அதிலும் செண்டிமெண்டுடன் ஃபேமிலி ஆடியன்ஸையும் கட்டிப்போடுவதென்றால்.. அதை சாதித்துக் காட்டியிருக்கிறார் இயக்குனர் பிரபுசாலமன்.

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக புதுமுகங்களை வைத்து ‘கயல்’ என்கிற படத்தை இயக்கிவருகிறார் பிரபுசாலமன். ‘மைனா’, ‘கும்கி’ என தொடர்ச்சியாக இரண்டு ‘ஹிட்’டுகளை கொடுத்தவருக்கு அடுத்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை சுவைக்கவேண்டுமானால் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்வது அவசியம் தான்.

இன்று பிறந்தநாள் காணும் பிரபுசாலமனுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

தனது பிறந்த நாளையொட்டி தனது நீண்டநாள் கனவான இயேசு பிறந்த பெத்லகேமிற்கு பயணப்படுகிறார் பிரபுசாலமன். தனது குடும்பம் உட்பட மொத்தம் 60 பேர் கொண்ட நண்பர்கள் குழுவுடன் நாளை(மே-8) இஸ்ரேல் புறப்பட்டு செல்கிறார்

Comments are closed.