ஹன்சிகாவை ஒரு அதிர்ஷ்ட தேவதை என திரை உலக வல்லுனர்கள் கூற ஆரம்பித்ததாக வந்த செய்தியின் பிண்ணனியில் இந்த வருடம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற இரு படங்களில் [தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2] அவர் நாயகியாக நடித்து தான் என கூறபடுகிறது. இந்த புதிய பட்டத்தை பற்றி ஹன்சிகாவை விசாரித்த போது ‘இதை வெறும் அதிர்ஷ்டம் என கூற முடியாது, என்னை பொறுத்த வரை அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பு வரும் போது அதை இரண்டு கைகளாலும் பற்றி கொள்ள தயார் நிலையில் இருப்பதுதான். ஒரு professional நடிகையாக மழை வெயில் என பாராமல் உழைப்பதும், இரவு பகல் என தூக்கமின்றி உழைப்பதும், நல்ல கதை, நல்ல தயாரிப்பு நிறுவனம், நல்ல இயக்குனர் என தேர்ந்து எடுப்பதும், என் பல பலவீனத்தை உணர்ந்து நடிப்பது என என் கடமையை ஆற்றுகிறேன். இதற்கும் மேலாக என் தாயின் அறிவுரையும்,ஊக்கமும் என் வெற்றியை உறுதி செய்கிறது. இதை எல்லாவற்றையும் விட நான் தத்து எடுக்கும் குழந்தைகளின் மூலம் எனக்கு கிடைக்கும் ஆசியும் எனக்கு இந்த பட்டத்தை அளித்து இருக்கலாம்’ என புன்னகையோடு கூறுகிறார் ஹன்சிகா.
Prev Post
Next Post