பிரமாண்டமாக நடந்த ‘ஐ’ இசை வெளியீட்டு விழா..!

70

இதோ அதோ என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது.. விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்டும் சூப்பர் ஸ்டார் ரஜினியும் பங்கேற்றனர்.

ஐ படத்தின் ஆடியோ விழாவுக்காக தனி விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவில் ஐ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் பிரமாண்ட திரையில் வெளியிடப்பட்டது. படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்த விழாவில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.

அதில் ரஹ்மான் உடன் பின்னணி பாடகர்கள் கார்த்திக், ஹரிச்சரண் ஆகியோர் ‘ஐ’ படத்தின் பாடல்களை பாடி அசத்தினர். நிகழ்ச்சியின் ஒருபகுதியாக அர்னால்டுக்கு பிடித்த பாடி பில்டிங்கும் செய்து காண்பிக்கப்பட்டது. இதனை அர்னால்டு மிகவும் ரசித்து பார்த்தார்.

“முதன்முறையாக நான் சென்னை வந்துள்ளேன். ஆஸ்கர் பிலிம்ஸ் படங்கள் எல்லாமே பெரிய படங்கள் என்று நான் கேள்விப்பட்டுள்ளேன். இந்த விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி. ‘ஐ போன்ற படங்களை பார்க்கும் போது எனக்கும் இந்திய படங்களில், குறிப்பாக ஷங்கரின் படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது. சென்னை மக்களின் அன்பு பிடித்து இருக்கிறது, நான் மீண்டும் சென்னைக்கு வருவேன்” என்று பேசினார்.

சூப்பர்ஸ்டார் ரஜினி முன்னிலையில் ‘ஐ’ படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த விழாவில் கன்னட நடிகர் புனித ராஜ்குமாரும் கலந்துகொண்டார்.

Comments are closed.