தயாரிப்பாளரான உதவியாளரை வாழ்த்திய ரஜினி..!

57

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் சுமார் 24 வருடங்கள் உதவியாளராக இருந்தவர் ஜெயராமன். அவர் தற்போது ‘கிருமி’ படத்தின் மூலமாக தயாரிப்பாளராகி இருக்கிறார். இதை அறிந்த ரஜினி அவரை வாழ்த்தியிருக்கிறார். இப்படத்தில் ‘மதயானைக்கூட்டம்’ படத்தில் நாயகனாக நடித்த கதிர் கதாநாயகனாக நடிக்கிறார். ரேஸ்மி மேனன்தான் நாயகி. பி.சி.ஸ்ரீராமின் மாணவரான அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார். கே இசை அமைக்கிறார்.

இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் அனுசரண் என்பவர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் திரைப்படம் சார்ந்த படிப்பை முடித்ததுடன் பல குறும்படங்கள், மியூசிக் வீடியோக்களும் இயக்கியுள்ளார்.
நல்ல வேலைக்காகக் காத்திருக்கும் . கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு திறமைசாலி இளைஞனுக்கு நடக்கும் சில சம்பவங்கள், அவன் கடந்து போகும் சில அத்தியாயங்கள் தான் கதை.

“ரஜினி சார் சிங்கப்பூரிலிருந்து உடல் நிலைசரியாகி வந்த போது இடையில் எனக்கும் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததைக் கேள்விப்பட்டு அங்கிருந்து வந்ததும் முதலில் கூப்பிட்டது என்னைத்தான். அவர் வந்தவுடன் என்னைக் கூப்பிட்டதும் விசாரித்ததும் எனக்கு அழுகை வந்து விட்டது. அவர் இல்லாமல் எனக்கு எதுவும் இல்லை. இந்தப் பெயர், முகவரி அவர் கொடுத்ததுதான். படம் தயாரிப்பது பற்றி ரஜினி சாரிடம் கூறினேன். மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர், “நல்லா பண்ணு.. இந்தக்காலத்துக்கு ஏற்றமாதிரி படம் இருக்கட்டும் செலவு செய்வதில் கவனமாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறி. வாழ்த்தினார்” என்கிறார் ஜெயராமன்.

Comments are closed.