அஜித் ரசிகராக தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதில் தான் எப்போதுமே பெருமைப்படுவார் சிம்பு. தற்போது அவர் படப்பிடிப்பிற்காக வெளிநாட்டில் இருந்தாலும் அங்கேயே பொங்கலுக்கு வெளியான ‘வீரம்’ படத்தைபார்த்துவிட்டாராம்.
படத்தை பார்த்து பிரமித்துப்போன சிம்பு, “அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் ஒரு மாஸான படத்தை தரும் வித்தை இயக்குனர் சிவாவுக்கு நன்றாகவே கைவந்திருக்கிறது, மீண்டும் ஒருமுறை வீரம்’ படத்தை பார்க்கப்போகிறேன்” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் சிம்பு