கமலுடன் கூட்டணி – ஹாட்ரிக் அடிக்கும் ஜிப்ரான்..!

212

உருவத்திற்குத்தான் வருடாவருடம் வயது ஏறுகிறதே தவிர நாளுக்குக்கு நாள் கமலின் மனதுக்கு மட்டும் வயசு குறைந்துகொண்டே போகிறது போலும். அதனாலஏயே தனது படங்களில் இளம் டெக்னீசியன்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறார் கமல். தற்போது லேட்டஸ்டாக அவரது அன்புப்பட்டியலில் இடம் பிடித்துள்ளவர் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

‘வாகை சூடவா’ படத்தில் இவரின் இசையில் உருவான ‘சரசர சாரக்காத்து’ பாடல் கமலை ரொம்பவே கவர்ந்துவிட உடனே ஜிப்ரானுக்கு தனது ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை தந்து ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

அந்த இன்ப அதிர்ச்சியில் இருந்து விலகாத ஜிப்ரானுக்கு, தான் அடுத்து நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பையும் தந்து சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்தார். இப்போது லேட்டஸ்ட் தகவலாக கமல் நடிக்க இருக்கும் ‘த்ரிஷ்யம்’ படத்தின் ரீமேக்கிலும் ஜிப்ரான் தான் இசையமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கமல் அப்படித்தான்.. சிலரை பிடித்துவிட்டால் போதும், அவர்கள் பெரியவரா, சின்னவரா என்றெல்லாம் பார்க்கமாட்டார்… அவர்கள் மீது தனி பிரியம் காட்ட ஆரம்பித்துவிடுவார். நாகேஷ், நாசர், சந்தான பாரதி இவர்களுக்கும் கமலுக்குமான நட்பு உங்களுக்குத்தான் தெரிந்திருக்குமே.

Comments are closed.