மகனுக்கு என்ட்ரி..! தந்தைக்கு ரீ என்ட்ரி – ஆச்சர்யம் தரும் பூரி ஜெகநாத்..!

195

பலரும் பல யூகங்களையும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.. ஆனால் மெகாஸ்டார் சீட்டுக்குலுக்கி போடவில்லை.. யாருக்கும் எந்த டேஸ்ட்டும் வைக்கவில்லை.. சுயம்வரம் வைக்காமலேயே தனது 15௦வது படத்தை இயக்கப்போகும் இயக்குனராக பூரி ஜெகநாத்தை தேர்ந்தெடுத்துள்ளார். இதில் புதிதாக ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை..

காரணம் தனது மகன் ராம்சரணை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்கு, சிரஞ்சீவி அப்போது பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்த இயக்குனர் பூரி ஜெகநாத் தானே.. அந்தப்படம் பெரிய அளவில் வெற்றிபெறாவிட்டாலும் ராம்சரணை ஒரு மாஸ் ஹீரோவாக சினிமாவுக்கு அடையாளம் காட்டிய வேலையை சரியாக செய்தது. அது தான் தனது ரீ என்ட்ரிக்கும் பூரி தான் சரியான ஆள் என அவரை தேர்ந்தெடுக்க சிரஞ்சீவியை தூண்டியுள்ளது என்கிறார்கள்.

Comments are closed.