‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் – ஜெய் மீண்டும் கூட்டணி

231

‘இவன் வேற மாதிரி’ படத்திற்கு பிறகு, தான் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கான ஸ்க்ரிப்ட் வேலைகளை முடித்துவிட்டார் இயக்குனர் சரவணன். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை அடுத்து இரண்டாவது முறையாக ஜெய்யுடன் கைகோர்க்கிறார் சரவணன். ஆக்‌ஷன் ரொமாண்டிக் கலவையாக உருவாக இருக்கும் இந்தப்படத்தின் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இவரது முந்தைய இரண்டு படங்களிலும் இசையமைத்து சூப்பர்ஹிட் பாடல்களை தந்தவர் இசையமைப்பாளர் சி.சத்யா. ஆனால் இந்தமுறை ஒரு மாறுதலுக்காக டி.இமானை தனது கூட்டணியில் சேர்த்துக்கொண்டு இருக்கிறார் சரவணன். ‘சூதுகவ்வும்’ படத்தின் ஒளிப்பதிவாளரான தினேஷ் கிருஷ்ணன் தான் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இந்த மாதத்திலேயே படப்பிடிப்பை துவங்க இருக்கிறார் சரவணன்.

Comments are closed.