விண்ணைத்தாண்டி வருவாயா, கோ என வெற்றிப்படங்களை தயாரித்த எல்ரெட் குமார், தானும் ஒரு படம் இயக்கிப் பார்ப்போமே என முப்பொழுதும் உன் கற்பனைகள் படத்தை இயக்கினார். படம் பாராட்டுக்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய அளவில் போகவில்லை. அதனால் மீண்டும் தயாரிப்பில் கவனம் செலுத்திவரும் எல்ரெட் குமார் தற்போது ‘யான்’ படத்தை தயாரித்து வருகிறார். ஜீவா, துளசி நடிக்கும் இந்தப்படத்தை ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்குகிறார்.
இது ஒருபுறம் இருக்க இப்போது பெயரிடப்படாத இன்னொரு படத்தையும் ஆரம்பித்துவிட்டார் எல்ரெட்குமார். கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குனராக இருந்த டீகே என்பவர்தான் இந்தப்படத்தை இயக்குகிறார். கோ படம் தயாரிப்பில் இருந்தபோதே அதில் பணியாற்றிய டீகே, இந்தப்படத்தின் கதையை எல்ரெட் குமாரிடம் சொல்லி ஓகே வாங்கி வைத்திருந்தாராம். படத்தில் நடிக்கவிருக்கும் கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.