இதை தற்செயலாக நடந்த ஒரு நிகழ்வாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னே திட்டமிட்டு யாராவது இப்படி செய்வார்களா என்ன? பில்டப் பலமாக இருக்கிறது என நீங்கள் நினைப்பது சரிதான். விஜய் நடிக்கும் ஜில்லா படத்திற்கு வைரமுத்து பாட்டு எழுதுகிறார் என்றால் சாதாரண விஷயமா? அதுவும் 2002ல் வெளியான ‘யூத்’ படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து வைரமுத்து மீண்டும் விஜய்க்கு பாடல் எழுதுவது அதிசயமான நிகழ்வுதான். எப்படி இடைவெளி விழுந்தது என்பதுதான் புரியாத புதிர். ஜில்லா படத்தின் இயக்குனர் நேசனும் இசையமைப்பாளர் டி.இமானும் இணைந்துதான் வைரமுத்துவை இந்தப்படத்திற்குள் இழுத்து வந்திருக்கிறார்கள். எது எப்படியோ இனி வைரமுத்து-விஜய் காம்பினேஷன் இடைவெளியில்லாமல் தொடரட்டும்.