காரை இடித்தார் அரசு பஸ் ட்ரைவர்..! அறிவுரை கூறி மன்னித்தார் குஷ்பு..!

111

மாநகர பேருந்து ஒன்று ஒரு கார் மீது இடித்துவிட்டது. சாதாரண விஷயம் தானே என்கிறீர்களா..? அது யாரோ ஒருவரின் காராக இருந்திருந்தால். ஆனால் இடிபட்டது குஷ்புவின் Q5 காராச்சே..

நேற்று சிக்னலுக்காக நின்றிருந்த குஷ்புவின் காரின் பின்புறம் பஸ் ஒன்று இடித்து நின்றது. அதிர்ச்சியடைந்த குஷ்பு வண்டியிலிருந்து இறங்கிப் பார்க்க, பின்பக்க பம்பர், லைட்டுகள் எல்லாம் காலி.. ஆனால் குஷ்பு அந்த ட்ரைவரிடம் சண்டையெல்லாம் போடவில்லை. அவருக்கு அட்வைஸ் மட்டும் செய்துவிட்டு கிளம்பிப்போய் விட்டார்.

இதில் குஷ்புவை வருத்தப்பட வைத்த விஷயங்கள் இரண்டு. ஒன்று அந்த கார் அவரது அன்புக்கணவர் சுந்தர்.சி அவருக்கு அன்பளிப்பாக வாங்கிக் கொடுத்தது. இன்னொரு விஷயம் காரை இடித்தவுடன் அந்த பஸ்ஸின் ட்ரைவர் வேகவேகமாக பஸ்ஸின் நம்பர் பிளேட்டையும் ரூட் போர்டையும் கழட்டி வைத்துவிட்டாராம்.

மேலும் பணிநேரத்தில் அந்த ட்ரைவரிடம் லைசென்சும் இல்லையாம். கேட்டால் அதிகாரிகள் எங்களை கண்டுகொள்வதில்லை என்றாராம் அந்த ட்ரைவர்.. இதேஇடத்தில் நாம் இருந்தால் நம்மை அப்படி சும்மா விட்டுவிடுவார்களா அதிகாரிகள் என ட்விட்டரில் வருத்தக்குரல் எழுப்பியுள்ளார் குஷ்பு.

Leave A Reply

Your email address will not be published.