“கெட்ட பையன் சார் இந்த அட்லீ” ; ‘தெறி’ விழாவில் மகேந்திரன் பெருமிதம்..!

223

Director-Mahendran praise atlee
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குனர் மகேந்திரன், நைனிகா (நடிகை மீனாவின் மகள்), மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தெறி’. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய இயக்குனர் மகேந்திரன் “இயக்குநர் அட்லீ ஒரே ஒரு படம் இயக்கிவிட்டு, இன்று சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கி இருக்கிறார். கெட்ட பையன் சார் இந்த அட்லீ. இப்படத்தில் இயக்குநர் அட்லீ சென்டிமெண்ட் காட்சிகளை எல்லாம் மிகவும் அற்புதமாக கையாண்டு இருக்கிறார். நான் மதிக்கும் மிகப்பெரிய கலைஞன் விஜய். அவருடன் நடிக்க நான் ரொம்ப அதிர்ஷ்டம் பண்ணியிருக்க வேண்டும். ஒரு நல்ல மனிதன் என்பதற்கு சிறந்த உதாரணம் விஜய். இப்படத்தில் அவர் நடித்திருக்கும் சண்டைக்காட்சிகள் என்னை ஆச்சர்யமடைய செய்தது.” என்று பேசினார் இயக்குநர் மகேந்திரன்.

Comments are closed.