இயக்குனர் வெற்றிமாறன் ‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’ படங்களை தொடர்ந்து தனது மூன்றவது படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் நிதானமாக செயல்பட்டு வருகிறார். இந்தப்படத்திலும் தனுஷுடன் சேர்ந்து ஹாட்ரிக் கூட்டணி அமைத்திருக்கிறார் வெற்றிமாறன் என்பது ஏற்கனவே உறுதியான செய்திதான்.
ஆனால் அதற்குள் அவர் தனுஷை வைத்து இந்தியில் படம் இயக்கப்போகிறார், அதை ‘ராஞ்சனா’ டைரக்டர் ஆனந்த் எல்.ராய் தயாரிக்கப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. ஆனால் இதை அப்படியே மறுக்கிறார் வெற்றிமாறன். “தனுஷை வைத்து படம் இயக்க இருப்பது உண்மை.. ஆனால் அது தமிழில்தான். படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். தனுஷ் இப்போது கே.வி.ஆனந்த்தின் ‘அனேகன்’ படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்ததும் என் படத்தை ஆரம்பிக்க இருக்கிறேன்” என்கிறார்.