
தனுஷ் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் கொடி’. இந்தப்படம் . அரசியலை மையமாக கொண்டு உருவாகி உள்ளது என்பதுடன், தனுஷ் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்பதே இந்தப்படத்திற்கான எதிர்பார்ப்பாகவும் படத்திற்கு மிகப்பெரிய பப்ளிசிட்டியாகவும் அமைந்துவிட்டது.
ஆனால் இந்தப்படத்தை தமிழகம் முழுதும் உள்ள ரசிகர்களிடம் இன்னும் பிரபலப்படுத்தும் விதமாக. வருகிற அக்டோபர் 25, 26 ஆகிய தேதிகளில் சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய ஊர்களுக்கு தனுஷ், த்ரிஷா, பாடலாசிரியர் அருண்ராஜாகாமராஜா, நடிகர் காளி வெங்கட் ஆகியோர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர்..
‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’ என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வெற்றிமாறனும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனும் இந்தப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.
Comments are closed.