வென்றது தந்தை பாசம் – தந்தையுடன் சென்றார் மகள்

73

திரைப்பட இயக்குனர் சேரனின் இளைய மகள் தாமினி, சென்னையைச் சேர்ந்த சந்துரு என்பவரை காதலித்ததால், பிரச்னையானது குறித்த விபரங்கள் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். கடந்த சில நாட்களாக நீதிமன்றத்தில் இது சம்பந்தமான வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதுவரை தாமினியை அவர் படித்த பள்ளி தாளாளர் வீட்டில் தங்க வைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பதினைந்து நாட்கள் கழித்து வழக்கு விசாரணை இன்று(ஆகஸ்ட் 21ம் தேதி) நீதிபதிகள் தனபாலன் மற்றும் செல்வம் ஆகியோர் முன்பு வந்தது. அப்போது ஆஜரான தாமினி, தான் பெற்‌றோருடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதற்கு சந்துருவின் தாயார் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணையை மதியத்திற்கு மேல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

மீண்டும் இந்த வழக்கு மதியத்திற்கு மேல் தொடர்ந்து விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தாமினி யாருடன் செல்ல விருப்பப்படுகி‌றாரோ அவருடனே செல்லலாம் என உத்தரவிட்டனர். மேலும் சந்துருவின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து தனது தந்தை சேரனுடன் சென்றார் தாமினி. நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சேரனின் தந்தை பாசமே வென்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.