ஒளிப்பதிவாளர் பிரியன் காலமானார்..!

184

Cinematographer_Priyan

தமிழ் சினிமாவில் பிரபலமான ஒளிப்பதிவாளரான பிரியன் இன்று மாரடைப்பால் திடீரென காலமானார். இவருக்கு வயது 55 பாலுமகேந்திராவிடம் பல படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர், பின்னர் தொட்டாச்சிணுங்கி படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார்.

கமல், விஜய், அஜித், சூர்யா, விஷால், சிம்பு என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். குறிப்பாக இயக்குநர் ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக ப்ரியன் தான் இருந்துவந்தார். ப்ரியனின் திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவரது சொந்த ஊரான விருதுநகரில் நாளை(நவ., 10) இறுதிச்சடங்கு நடைபெறுகிறது

Comments are closed.