பாண்டிராஜ்-கார்த்தி படத்திற்கு பூஜை ; சூர்யா தயாரிக்கிறார்..!

102

karthi new film pooja

படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது என்பதுதான் ஸ்பெஷல்.. கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படம் வரும் நவ-17ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்தநிலையில் இதுவரை பேச்சு வார்த்தையிலேயே இருந்து வந்த கார்த்தியின் புதிய படத்திற்கு இன்று அதிகாரப்பூர்வமாக அச்சாரம் போட்டுள்ளார்கள்..

ஆம்.. கார்த்தி நடிக்கும் படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார் என சொல்லப்பட்டுவந்த நிலையில் இன்று அந்தப்படம் பூஜையுடன் துவங்கியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை சூர்யா தாயார் லட்சு​​மி சிவகுமார் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். தொடர்ந்து படப்பிடிப்பு ஐந்து நாள் சென்னையில் நடைபெறும். இந்தப்படத்தின் பூஜையில் சிவகுமார், சூர்யா, சத்யராஜ், நாயகி சாயிஷா, சூரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Comments are closed.