
கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியான நான்கு படங்களில் எதுவுமே சோடை போகவில்லை என்பது ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் தான்.. அதில் ‘மீகாமன்’, ‘கப்பல்’ ஆகிய படங்களின் படக்குழுவினர், தங்களது படங்களின் வெற்றிக்காக, வெற்றி சந்திப்பு நடத்தி தங்களது நன்றியையும் தெரிவித்துவிட்டனர்.
அப்படிப்பட்ட சந்திப்பின்போது ‘கப்பல்’ பட கேப்டனான கார்த்திக் ஜி.கிரிஷ்ஷிடம் இந்த நான்கு படங்களில் உங்கள் படம் எந்த இடத்தில் இருக்கிறது என கேட்டதற்கு, சற்றும் தயங்காமல், நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது என பதிலளித்தார்..
அப்படியும் விடாமல், ஏற்கனவே ‘மீகாமன்’ குழுவினர் தங்களது படம் தான் முதல் இடத்தில் உள்ளது என்று சொல்கிறார்களே என ஒரு கொக்கியைப்போட, அதற்கும் அசராத இயக்குனர், “ஒரு வகுப்பில் இரண்டு மாணவர்கள் ஒரே மாதிரி மதிப்பெண் வாங்கி பர்ஸ்ட் ரேங்க் எடுப்பதில்லையா, அதுமாதிரிதான் இதுவும்” என சாமர்த்தியமாக பதில் சொல்லி தப்பித்தார்.
Comments are closed.