
பொங்கல் ரிலீஸ் படங்களை அடுத்து, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘அனேகன்’. இந்தப்படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ், எழுத்தாளர்கள் சுபா, எடிட்டர் ஆண்டனி என தனது வழக்கமான வலுவான கூட்டணியுடன் களம் இறங்கியுள்ளார் கே.வி.ஆனந்த்..
தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட்டை சேர்ந்த அமிரா தஸ்தூர் நடிக்க, ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் நவரச நாயகன் கார்த்திக். இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தப்படத்தின் ட்ரெய்லரை ஜனவரி முதல் வாரத்திலும் படத்தை ஜனவரி இறுதியிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
Comments are closed.