புதையலைத் தேடும் படங்களின் வரிசையில் உருவாகும் ‘சோழவம்சம்’

65

புதையலைத் தேடிக்கண்டுபிடிக்கும் வரிசையில் இப்போது புதிதாக உருவாகி வருகிறது ‘சோழவம்சம்’ என்ற படம். ஒரு ஜோதிடர் சொன்னதன் பேரில் 1000 வருடங்களுக்கு முன்பு நாட்டை ஆண்ட ராஜராஜசோழன் அரண்மணையில் இருந்த விலை உயர்ந்த பொக்கிஷங்களை ஒரு பாதாள அறையில் போட்டு பூட்டி வைக்கின்றனர். அதன் இருப்பிடத்தை பின்னாளில் வரும் சந்ததியினர் கண்டுகொள்வதற்கு வசதியாக ஒரு வரைபடமும் தயாரிக்கின்றனர்.

காலபோக்கில் அந்த வரைபடம் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் கிடைக்கிறது. அவள் இந்தியாவுக்கு வந்தாளா? அந்த புதையலை மீட்டாளா? அந்த புதையலை மறைத்து வைத்த மர்மம் என்ன என்பதற்கு விடையாக இந்த சோழவம்சம் படம் உருவாகி வருகிறது. குஜராத் மாடல் அழகி ஸ்ருதி படேல் கதாநாயகியாக நடிக்க, இந்தப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் பா.ஜெயகார்த்திக்.

Leave A Reply

Your email address will not be published.