செல்பியின் கருப்பு பக்கங்களை படம்பிடித்து காட்டவரும் ‘சண்டிக்குதிரை’..!

200

sandi kuthirai

விஞ்ஞான வளர்ச்சி என்பது நன்மையும், தீமையும் கலந்தே இருக்கிறது. இன்று மொபைல் போன் இல்லாத ஆளே இல்லை. தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட மொபைல் போன் இன்று வேறு பரிமாணத்திற்கு மாறி விட்டது. அதன் இன்னொரு பக்கத்தை, செல்பி என்கிற வியாதியின் கருப்பு பக்கங்களை மிக நுணுக்கமான வெளிச்சம் போட்டு கட்ட வருகிறது ‘சண்டிக்குதிரை’..

இவர் பல பத்திரிக்கைகளில் 350 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதிய, எல்லா பிரபலமான தொலைக்காட்சிகளிலும் இயக்குனராக, கதாசிரியராக பணியாற்றிய அன்புமதி கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார். இவர் நிறைய விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். சின்னத்திரையில் பிரபலமான இவர் சின்ன திரையில் தொடர்களில் நடிப்பதை மறுத்து சினிமாவில் மட்டும் கால் பதித்துள்ளார். கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார். காமெடி கலந்த திகில் படமாக இந்த ‘சண்டிக்குதிரை’ உருவாகி உள்ளது என்றார் இயக்குனர் அன்புமதி.

Comments are closed.