
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள், ஆடம்பரங்கள் பிரமாண்டங்கள், போஸ்டர்கள் கூட இல்லாமல் ஒரு சினிமாவை எடுத்து ஆடியோ வெளியிட்டு அது திரைக்கும் வரப்போகிறது. அதுதான் ‘சவாரி’ திரைப்படம்.. நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடத்தில் வந்த குகனுக்கு இது முதல் தமிழ்ப்படம்.
சிகப்பு ரோஜாக்கள்’ படத்திற்கு பிறகு ஒரு முழுமையான சைக்கோ த்ரில்லர் படமாக இது இருக்கும் என்கிறார் இயக்குனர் குகன். இந்தப் படத்தை ஆரம்பித்ததில் இருந்து வெளியிடுவதில் வரை நடந்த விஷயங்களை தனிப் படமாக எடுக்கலாம். அவ்வளவு சிரமங்கள், அவ்வளவு தடைகள், காமெடிகள், சஸ்பென்ஸ்கள் இருக்கின்றன என்று படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் செழியன் தனது முகநூல் பக்கத்தில் மிகப்பெரிய பதிவே இட்டுள்ளார்..
அதில், “ஒகேனக்கல் காட்டுக்குள் படம் எடுத்த நாட்கள் சுவாரஸ்யமானவை. நடிகர்களைச் சேர்த்து மொத்தமே பதினைந்து பேரும் ஒரு காரும் தான் படப்பிடிப்புக்குழு. அதிலும் நடிப்பவர்கள் நடித்து முடித்ததும் உதவி இயக்குனர்களாக மாறுவார்கள். எந்தக் காட்சியை எடுக்கிறோம் என்று அங்கிருக்கும் எல்லோருக்கும் தெரிந்தது. ஒருவர் பேசவேண்டிய வசனம் இன்னொருவருக்குத் தெரிந்தது. எழுதிய திரைக்கதையில் எந்தத் திருத்தமும் படப்பிடிப்பில் நடக்கவில்லை. கேமரா மற்றும் உபகரணங்கள் தவிர வழக்கமான படப்பிடிப்பில் இருக்கும் போலியான எந்த உபரி சம்பிரதாயங்களும் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
வரும் மார்ச்-18ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது..
Comments are closed.