Celebrity Speech and Photos – International Conference Loyola

94

[nggallery id=1002]

மனுஷ்யபுத்திரன்:
பல்வேறு விஷயங்களில் முன்னோடியாக விளங்குகிறது லொயோலா கல்லூரி மற்றும் ஊடகதுறையும். இந்திய மொழிகளிலேயே தமிழ் மொழியில் மட்டும்தான் வெவ்வேறு கதைகளங்கள் உருவாகப்படுகின்றன. இலக்கியங்கள் திரைப்படங்களுக்கு அதிகக் கதைகளங்களைத் தருகின்றன. ஆனால் திரையுலகப் படைப்பாளிகள் அதை ஏற்றுக் கொள்வது இல்லை. ஆசைப்பட்டு வந்தது ஒன்று, செய்தது ஒன்றாக இருக்கிறது. நாகராஜனின்- ‘ஆண்மை ஆதவனின் ஒரு அறையில் இரண்டு நபர்கள்’ போன்ற நாவல்கள் படமாக்கப்பட வேண்டிய நாவல்கள் இன்றளவும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை.

பாரதிராஜா:
“என் இனிய தமிழ் மக்களே” இந்த மண் மொழி சார்ந்த படங்களை எடுத்ததே எனது தகுதி, காட்டாற்று வெள்ளம் நான் எனக்கு இலக்கிய விதிகள் இல்லை.”தமிழ் இலக்கியங்களில் திரைப்படங்களுக்கான கதைக்கருகள்” என்பதே அற்ப்புதமான தலைப்பு. திரைப்பட ஊடகம் என்பது வர்த்தகத்தின் அடிப்படையாக உள்ளது. வெகுஜனமாக பார்க்கும் பொழுது வியாபாரம். இலக்கியவாதிகள் வித்தைக்காட்ட முடியாது ஆனால் சினிமாக்காரர்கள் வித்தைக் காட்டித்தான் ஆகவேன்டும். பொன்னியின் செல்வன் 3 பகல் 3 இரவு படித்து முடித்தேன் அதை எப்படி திரைப்படமாக எடுக்க முடியும்? அப்படி எடுத்தால் அதன் சாரம் குறைந்துவிடும். எல்லா மொழிப்படங்களும் தங்கள் கலாசாரத்தை பின்பற்றுகின்றன. ஆனால் தமிழ் திரைப்படங்கள் அடையாளங்களை தொலைத்துக் கொண்டிருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.