சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி தற்போது ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.. இந்தப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக விக்ராந்தும், இன்னொரு கதாநாயகனாக சந்தீப்பும் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இதில் சந்தீப்புக்கு ஜோடியாக மெஹ்ரீன் என்பவர் இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். சுசீந்திரனுடன் ஐந்தாவது முறையாக இந்தப்படத்தில் கூட்டணி சேர்ந்துள்ளார் டி.இமான். சமீபத்தில் இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸை நடத்திய சுசீந்திரன், கேப்டன் விஜயகாந்தையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்..
சுசீந்திரன் விஜயகாந்தை சந்திக்க காரணம் என்னவாக இருக்கும் என குழம்பவேண்டாம். இந்தப்படத்தின் டைட்டில் 36 வருடங்களுக்கு முன் எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்சனில் விஜயகாந்த் நடித்த வெற்றிப்படத்தின் டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மரியாதை நிமித்தமாக விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்கள்.

Comments are closed.