வெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘பிரியாணி’ படத்தை வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். பையாவுக்கு பிறகு ஒரு ப்ளேபாய் வாழ்க்கையை பின்பற்றும் ஸ்டைலிஷ் இளைஞனாக நடித்திருக்கிறார் கார்த்தி. இந்தப்படத்தில், கார்த்தியின் பாடி லாங்வேஜையே முற்றிலும் மாற்றி நடிக்க வைத்துள்ளார் வெங்கட்பிரபு.
இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் கார்த்தி, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, யுவன்சங்கர் ராஜா நான்குபேருமே பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள். அதனால் படப்பிடிப்பில் இவர்களின் ஜாலி கலாட்டாக்களுக்கு அளவே இல்லையாம். இவர்களின் கலாட்டாக்கள் ஹன்சிகாவையும் தொற்றிக்கொள்ள படப்பிடிப்பின்போது எந்தவித பதற்றமும் இன்றி உற்சாகத்துடன் நடித்துள்ளார் ஹன்சிகா. இவருடன் மண்டி தக்கர் என்ற பஞ்சாப் நடிகையும் படத்தில் திருப்புமுனை கதாபாத்திரமாக வருகிறார்.
யுவனுக்கு பிரியாணி 100 வது படம். நடிகர்கள் தங்களது நூறாவது படத்தை எப்படி எதிர்பார்ப்பார்களோ அந்த் அளவுக்கு யுவனும் இதன் வெற்றியை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார். மொத்தத்தில் எல்லோரையும் ஈர்க்கும் சுவாரஸ்யமான த்ரில்லர் படமாக ‘பிரியாணி’ இருக்கும் என்கிறார் கார்த்தி.