‘கரு பழனியப்பன் பட கதாநாயகி ஆனார் பிந்து மாதவி..!

94

அருள்நிதி நடிப்பில் ‘புகழேந்தி எனும் நான்’ என்ற அரசியல் படத்தை இயக்குனர் கரு பழனியப்பன் இயக்குவதாக அறிவித்த நாளில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போது இந்த படத்தின் நாயகியாக, ‘கழுகு’ மூலம் கவனம் ஈர்த்த, ‘பிக்பாஸ்’ மூலம் ஒவ்வொரு தமிழ் ரசிகர்கரின் வீட்டிலும் இடம்பிடித்த பிந்து மாதவியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

பொதுவாக, தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்களே தங்கள் படங்களின் நாயகிகளின் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைப்பார்கள். அவர்களில் கரு பழனியப்பன் மிகவும் முக்கியமானவர். இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை பற்றி நடிகை பிந்து மாதவி என்ன சொல்கிறார்..?

“எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், நான் சிறந்த கதைகளையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நல்ல கதை மட்டுமல்லாமல், நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி சமீபத்தில் எனக்கு அமைந்த படம் தான் ‘புகழேந்தி எனும் நான்’. இது அரசியல் சார்ந்த படம் என்றாலும் என் கதாபாத்திரத்திமும் முக்கியத்துவம் வாய்ந்தது.

எப்போதும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் கரு பழனியப்பன் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அருள்நிதியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி, புகழேந்தி எனும் நான் படத்தில் அவரின் திரை ஆளுமை இன்னும் அதிகமாகவே வெளிப்படும். டிசம்பரில் தொடங்கும் இந்த புகழேந்தி எனும் நான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்” என்கிறார் பிந்து மாதவி.

Comments are closed.