சீடருக்காக கதை எழுதுகிறார் இயக்குனர் ராஜூ முருகன்..!

106

‘ஜெய்ண்ட் ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் பெயரிடப்படாத புதிய படமொன்றை தயாரிக்கிறது. தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநரான ராஜு முருகன் இந்த புதிய படத்திற்கான கதை, வசனத்தை எழுதுகிறார். திரைக்கதை எழுதி இயக்குகிறார் அறிமுக இயக்குநர் சரவணன் ராஜேந்திரன்.

இவர் பாலுமகேந்திரா, கமல்ஹாசன், ராஜு முருகன் ஆகியோரிடம் பணியாற்றியவர். இந்த படத்தில் கோவையைச் சேர்ந்த ரங்கா நாயகனாக அறிமுகமாகிறார். இவர் கோவையை சேர்ந்த பிரபல சமையற்கலை நிபுணர் என்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

நாயகியாக ஸ்வேதா திரிபாதி நடிக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.. இந்தப் படத்தின் துவக்க விழா சமீபத்தில் ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் நடைபெற்றது. இந்தத் துவவக்க விழாவில் தயாரிப்பாளர் K. E. ஞானவேல்ராஜா குடும்பத்தினர், ஆரா மகேஷ் குடும்பத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்தப்படத்தின் தலைப்பு, மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

Comments are closed.