கடைசியில் ஆர்யாவும் பிசினஸில் இறங்கிவிட்டார். காரணம் செல்வராகவன் திறமையின் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் தன்னம்பிக்கை. அப்படி என்ன பிசினஸ் என்று கேட்கிறீர்களா? செல்வராகவன் இயக்கத்தில் தான் நடித்துள்ள ‘இரண்டாம் உலகம்’ படத்தை மலேசிய மற்றும் சிங்கப்பூர் தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் படம் இரண்டாம் உலகம் படத்தின் போஸ்ட் புரடக்ஸன் வேலைகள் முடிந்துவிட்ட நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். படத்தின் பாடல்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப்படம் வரும் நவம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.
முன்னணி நடிகர்களில் பலர் தாங்கள் நடிக்கும் படங்களில் சம்பளத்துடன் ஒரு குறிப்பிட்ட ஏரியாவின் உரிமையையும் வாங்குவது வழக்கமாக நடந்துவருவது தான். இப்போது அதில் ஆர்யாவும் இந்த ரூட்டில் இறங்கிவிட்டதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.