
மறைந்த இயக்குனர் பாலுமகேந்திரா சென்னை சாலிகிராமத்தில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு உட்பட பல கலைகளை கற்றுக்கொடுக்கும் சினிமா பட்டறை என்கிற திரைப்பட பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். இப்போதும் அது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
இதனை வெறும் பயிற்சிக்கூடமாக மட்டுமல்லாமல் படப்பிடிப்பு நடக்கும் ஸ்டுடியோவாகவும் நடத்தவேண்டும் என்பது பாலுமகேந்திராவின் விருப்பமாக இருந்தது. இப்போது அவரது சீடரான வெற்றிமாறன் அவரது கனவை நனவாக்கியுள்ளார்.
வெற்றிமாறன் தற்போது புதிய முயற்சியாக ‘விசாரணை’ என்ற 6௦ நிமிட படம் ஒன்றை இயக்கிவருகிறார். அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தின் சில முக்கியமான காட்சிகளை பாலுமகேந்திராவின் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் படமாக்கியுள்ளார்.
Comments are closed.