எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ தெரியவில்லை.. தெலுங்கில் பவர்ஸ்டார் பவன்கல்யாண் நடித்த ‘அத்தரண்டிக்கு தாரெதி’ படம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. ஏறக்குறைய ரம்ஜான் தினத்தன்றே ரிலீஸாகி இருக்கவேண்டிய இந்த படம் இன்றுவரை ரிலீஸாகமல் தள்ளிக்கொண்டே போகிறது.
இத்தனைக்கும் பைனான்ஸ் பிரச்சனையோ அல்லது கடன் பிரச்சனைகளோ காரணம் இல்லை என்பது மட்டும் தெரிகிறது. இந்த சூழலில் இந்தப்படத்தின் ஒன்றரை மணி நேர படமே இணையதளத்தில் வெளியாகியுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை படக்குழுவினருக்கு ஏற்படுத்தியுள்ளது.
இது மற்ற எல்லோரையும்விட இந்தப்படத்தின் கதாநாயகி சமந்தாவை மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. “ஒன்றரை மணி நேர படம் இணையத்தில் வெளியானது அதிர்ச்சி அளிக்கிறது. தயவுசெய்து ‘அத்தரண்டிக்கு தாரெதி’ படத்தை சப்போர்ட் செய்யுங்கள். ஏனென்றால் இந்தப்படத்தில் அத்தனை பேரும் அவ்வளவு கடின உழைப்பை கொட்டியிருக்கிறோம். ஒரு நல்ல படம் வெற்றிபெற அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள்” என்று இது குறித்து வருத்தத்துடன் கருத்து தெரிவித்துள்ளார் சமந்தா.
இந்தப்படத்தை அக்டோபர் 9ஆம் தேதி ரிலீஸ் செய்வதாக திட்டமிட்டிருந்தார்கள். இந்த பிரச்சனையால் படம் முன்கூட்டியே வெளியாகவும் வாய்ப்பு இருக்கிறது.