
அட்டகத்தி தினேஷ் வெகு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், படங்களையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் கவனம் செலுத்துவதால் குறுகிய காலத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.. சமீபத்தில் வெளியான வெற்றிமாறனின் ‘விசாரணை’யில் இவரது அழுத்தமான நடிப்பு அனைவரையும் கண்கலங்க வைத்தது.. இது ஒருபக்கம் இருக்க, இன்னொரு மாபெரும் அங்கீகாரமாக சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ‘கபாலி’ படத்தில் நடித்து வருகிறார் தினேஷ்..
இன்று அவரது பிறந்தநாள் என்பதால் படக்குழுவினர் அதை படப்பிடிப்பு தளத்திலேயே கொண்டாட முடிவு செய்தார்கள்.. விஷயம் அறிந்த ரஜினி தினேஷுக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். தனது பிறந்தநாளை சூப்பர்ஸ்டாருடன் கொண்டாடியதை விட மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசு தினேஷுக்கு வேறு ஏதேனும் உண்டோ..?
Comments are closed.