
‘பரதேசி’ படத்தை தொடர்ந்து அதர்வாவின் மார்க்கெட் ஏறியது போலவே ரசிகர்களிடம் அவரைப்பற்றிய ஆர்வமும் அதிகரித்திருக்கிறது. தற்போது ‘இரும்பு குதிரை’ படத்தில் நடித்துவருகிறார் அதர்வா. சமீபத்தில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் யூ-டியூப்பில் வெளியான சில நாட்களிலேயே ஒரு லட்சம் பேரால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
யுவராஜ் போஸ் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். இதுதவிர லட்சுமிராயும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் அதர்வா, ப்ரியா ஆன்ந்த் இருவரும் பைக்ரேஸ் வீரர்களாக வருகிறார்கள்.
Comments are closed.