சமீபத்தில் சென்னை இசை நிகழச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்க டி.வி நிர்வாகம் ஆஷாபோன்ஸ்லேவை அழைத்திருந்தது. பிரஷாத் ஸ்டுடியோவில் நடந்த அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஆஷா முதலில் ராஜாவை பார்க்கனும் என்று ஆசைப்பட்டிருக்கிரார். இளையராஜா இருந்த ஒலிப்பதிவு கூடத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு ஆஷாவை எதிர்பார்க்காத ராஜா சந்தோஷப்பட்டுப் போனார். நீண்ட நேரம் மனம் விட்டு இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த கார்த்திக் ராஜா இந்த காட்சியை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்துக்கொண்டார். பின்னர் ராஜாவிடம் விடைபெற்றுக்கொண்டு நிகழ்ச்சிக்கு புறப்பட்டார் ஆஷாபோஸ்லே. ராஜாவின் இசையில் ‘செண்பகமே..செண்பகமே’, ’ஆராரோ ஆரிரோ’, ‘வளையோசை கல கலவென” போன்ற பாடல்களை ஆஷாபோன்ஸ்லே பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.