தமிழ் சினிமாவில் சாதனை இயக்குனரான இராம.நாராயணன் அவர்கள் இயக்கிய படமான ஆர்யா சூர்யா காமெடி தோரணமாக தயாராகியிருக்கிறது. படத்தில் ஏகப்பட்ட விஷேசங்கள். முதலாவது படத்தின் ஒரு பாடலை பாடி, இசையமைத்து, கவர்ச்சி நடிகை முமைத்கானோடு சேர்ந்து ஆடியுமிருக்கிறார் டி.ராஜேந்தர். இந்த படத்தின் ஹீரோவோடு சேர்ந்து படம் முழுக்க வரப்போகிறார் பவர் ஸ்டார் சீனிவாசன். முதன் முதலாக படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கிறார் கங்கை அமரன். படம் முழுக்க எடுத்து முடித்த பிறகு போட்டு பார்த்த யூனிட்டிற்கு ஃபுல் அன் ஃபுல் காமெடியாக வந்திருப்பதில் முழு திருப்தி. ஆனால் இராம.நாராயணனுக்கு மட்டும், ஏதோ குறைவதாக தோன்றியிருக்கிறது.
அப்பாவின் முகக்குறிப்பை புரிந்து கொண்ட இயக்குனரின் மகன் முரளி ”அப்பா படத்தில் எந்த விலங்குகளும் இல்லை. அது தான் குறை.” என்றிருக்கிறார். பிறகு ஒரு காட்சியில் பாம்பு ஒன்றை கிராஃபிக்ஸில் சேர்த்து இராம.நாராயணனின் டச் கொடுத்திருக்கிறார்கள். அங்குதான் வில்லங்கமே கிராஃபிக்ஸாக இருந்தாலும் கூட ப்ளுக்ராஸிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றிருக்கிறார்கள். அந்த பாம்பு காட்சி கண்டிப்பாக வேண்டும் என்று இயக்குனர் விரும்ப அனுமதி வாங்கித் தந்து அப்பா இராம.நாராயணனை திருப்தி படுத்தியிருக்கிறார் முரளி. படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு யு சான்றதழ் கொடுத்திருக்கிறது.