ஒரு சில நகைச்சுவை நடிகர்கள் போல வந்தோமா, நான்கைந்து சீன்களில் காமெடி டயலாக் பேசி கைதட்டல் வாங்கிவிட்டு போனோமா என்கிற ரகத்தை சேர்ந்தவர் அல்ல ஆடுகளம் முருகதாஸ். அதனால் காமெடியுடன் கூடிய கேரக்டர் ரோல்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் முருகதாஸ். விசாரணை படத்தில் அவர் போலீசிடம் அடிவாங்கி கதறுவதை பார்த்தாலே இது நன்றாக தெரியும்.
அந்தவகையில் தற்போது மஞ்சப்பை ராகவன் இயக்கத்தில் ஆர்யாவுடன் ‘கடம்பன்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் முருகதாஸ். இந்தப்படத்தில் யானைகளுடன் நடிப்பதற்காக பாங்காக் சென்று திரும்பியுள்ளார் முருகதாஸ்.. சில காட்சிகளில் ஆர்யாவுடன் சேர்த்து அறுபது யானைகளுடன் நடித்த அனுபவம் த்ரில்லாக இருந்தது என்கிறார் முருகதாஸ்.

Comments are closed.