“தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுவது நானாக எடுத்த முடிவு” ; குஷ்பு..!

195

kushboo-1

முன்பெல்லாம் தயாரிப்பாளர் சங்க தேர்தல் என்றால் இரண்டு முனை போட்டியோடு முடிந்துவிடும்.. ஆனால் நடிகர் சங்க தேர்தல் பரபரப்பாக நடைபெற்றதை போல இப்போது தயாரிப்பாளர் சங்க தேர்தலிலும் நான்கு முனை ஐந்துமுனை போட்டி நடப்பது உறுதியாகி உள்ளது..

அதில் விஷால் அணியின் சார்பாக தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறார் குஷ்பு.. இந்த அறிவிப்பை விஷால் வெளியிட்டதால், ஒருவேளை தயாரிப்பாளர் சங்கத்துடனான தனது பகையை தீர்த்துக்கொள்ள தங்களுடைய ஆளாகத்தான் குஷ்புவை அவர்கள் அறிவித்திருக்கிறார்களோ என்கிற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டது..

ஆனால் இந்த விஷயத்தை தெளிவுபடுத்தியுள்ள குஷ்பு, இந்த தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்ததே நான் தான்.. நான் படித்தவள்.. யோசிக்கும் அறிவுடையவள்.. அதனால் இன்னொருவர் எடுக்கும் முடிவுக்கு நான் ஒப்புக்கொண்டு போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை.. இந்த தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் விஷால் அணி தரப்பினருடன் இணைந்து செயல்பட்டு பல புதிய நல்ல மாற்றங்களை கொண்டு வருவோம் என கூறியுள்ளார் குஷ்பு.

Comments are closed.