அஜித் பட ‘டைட்டிலை’ திட்டமிட்டு தாமதப்படுத்தவில்லை : விஷ்ணுவர்தன்

107

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் பொதுவாக தான் பேசுவதை விட தன் படம் பேசுவதே தனக்கு பெருமை என கூறுபவர் .ஆனால் சமீபமாக .அஜீத் குமார் , ஆர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகும் ஆரம்பம் திரை படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி அவர் தந்த பேட்டி இதோ !!!

‘ஆரம்பம்’ என்ற தலைப்பு எல்லோரையும் கவர்ந்துள்ளது . இந்த தலைப்புக்கான தாமதம் திட்டமிடப்பட்டது அல்ல. ஆனால் இந்த வரவேற்பு கிடைக்க அந்த தாமதமும் ஒரு காரணம் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான் . இது ஒரு போராட்ட குணமுள்ள ஒரு தனி மனிதனின் கதை .கதையில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் அந்த பிரதான சூரியனை சுற்றி வரும் கோள்கள்தான். இந்த படத்திலும் அஜீத் சார் மங்காத்தா படம் போலவே நரை கலந்த தலை முடியுடன் தான் நடிக்கிறார் . அந்த படத்துக்கு முன்னரே அவரிடம் என் படத்துக்கு இந்த கெட் அப்பில் தான் வேண்டும் என்று கேட்டிருந்தேன் , ஆனால் வெங்கட்பிரபு முந்தி கொண்டார் .இந்த style அவர் அளவுக்கு வேறு யாருக்காவாவது அமைந்து இருக்குமா என்றால் சந்தேகமே .இது ஒரு Action drama…விறுவிறுப்பான வேகமான படம் .எங்களது கூட்டணியில் உருவான ‘ பில்லா’ படத்தை விட பல மடங்கு வேகமாக இருக்கும் , அஜீத் ரசிகர்களை மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக இருக்கும் என்பது நிச்சயம் ‘ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

1 Comment
  1. https://greendero.eu says

    Wow, wonderful blog layout! How long have you ever
    been blogging for? you make blogging glance easy.
    The whole glance of your web site is wonderful, let alone the
    content material! You can see similar here ecommerce

Leave A Reply

Your email address will not be published.