ஹீரோவாக கொலோசி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செகண்ட் இன்னிங்ஸில் அடியெடுத்து வைத்து வெற்றிக்கொடி நாட்டுவது என்பது மிக கடினமான ஒன்று. ஆனால் அரவிந்த்சாமி அதை அசால்டாக செய்து வருகிறார். அதனாலோ என்னவோ, பட எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை…நல்ல படம் தரமான கதைக்களம் திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அரவிந்த்சாமி…
அந்தவகையில் அப்படி வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஒரு படத்தை சமீபத்தில் அவர் தேர்ந்தெடுத்து ஒத்துக்கொண்டுள்ளார். “என்னமோ நடக்குது” “அச்சமின்றி” போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்தப்படத்தை இயக்குகிறார். .
செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க உள்ள இப்படத்தில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்க உள்ளார்..படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள் மற்றும் பிரபலமான கலைஞர்கள் பற்றியும் தயாரிப்பு நிறுவனம் பற்றியும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Comments are closed.