இறுதிக்கட்டத்தில் அரவிந்த்சாமி-ரெஜினா நடிக்கும் ‘கள்ளபார்ட்’..!

207

kallapart

மூவிங் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் எஸ்.பார்த்தி, எஸ்.சீனா இணைந்து தயாரிக்கும் படம் “கள்ளபார்ட்” அரந்த்சாமி கரானாயகனாக நடிக்கிறார். கதா நாயகியாக ரெஜினா நடிக்கிறார். வில்லனாக புதுமுகம் பார்த்தி நடிக்கிறார்.. மற்றும் ஹரிஷ் பெராடி, ஆதேஷ் பாப்ரிகோஷ் ராட்சசன் புகழ் பேபி மோனிகா நடிக்கிறார்கள். பி.ராஜபாண்டி என்பவர் படத்தை இயக்குகிறார்..

வித்தியாசமான கதைக்களம் கொண்ட கள்ளபார்ட் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக ஏவி எம் ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமான மூன்று விதமான அரங்குகள் அமைக்கப்பட்டு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

படத்தின் முக்கியமான காட்சிகள் ஆக்‌ஷன் காட்சிகள் செண்டிமெண்ட் காட்சிகள் படமாக்கப் பட்டது. அரவிந்த் சாமி ரெஜினா காட்சிகள் பெரும்பகுதி படமாக்கப்பட்டது. இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடை பெற உள்ளது.

Comments are closed.